தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!

ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!

ஆசிரியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!


UPDATED : செப் 05, 2014 12:00 AM

ADDED : செப் 05, 2014 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2014 12:00 AM ADDED : செப் 05, 2014 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கு, இடைவிடாது உழைத்திடும் ஆசிரியர்களின் கல்விப்பணி, மேன்மேலும் சிறந்தோங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: ஆசிரியராக தன் வாழ்வை துவக்கி, ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது, வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பதல்ல; நல்லொழுக்கத்தையும், சிறந்த பண்பையும், பொது அறிவையும், சமூக சிந்தனைகளையும், மாணவ சமுதாயத்திற்கு கற்பிப்பதாகும்.

மாணவச் செல்வங்களுக்கு, தரமான கல்வியை அளிப்பதுடன், அவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும், ஆசிரியர்களை பாராட்டி, தமிழக அரசு, ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 14,700 ஆசிரியர் பணியிடங்கள், தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

மாணவர் சமுதாய மேம்பாட்டிற்கு, இடைவிடாது உழைக்கும், ஆசிரியர்களின் கல்விப்பணி, மேலும் சிறந்தோங்க வேண்டும் என, வாழ்த்தி, அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us