தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்ப அறிவிப்பு!

இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்ப அறிவிப்பு!

இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்ப அறிவிப்பு!


UPDATED : செப் 05, 2014 12:00 AM

ADDED : செப் 05, 2014 02:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2014 12:00 AM ADDED : செப் 05, 2014 02:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசா காலத்தை நீட்டிக்கும் அதிகாரத்தை, மத்திய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டவர் பதிவு அலுவலகங்களுக்கு(FRO) வழங்கியுள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் சிறப்பு நன்மையைப் பெறவுள்ளனர். இந்தியாவில் தற்போது 93,300 வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கூறப்படுவதாவது: தற்போதைய புதிய அறிவிப்பின் மூலம், அம்மாணவர்களின் விசா காலத்தை நீட்டிக்க முடியும் மற்றும் 6 மாதங்கள் வரை தற்காலிக மாணவர் விசா வழங்க முடியும். மேலும், இதுதவிர, ஒரு கல்வி ஆண்டிற்கு 3 உள்நுழைவுகள்(entry) என்று இருந்த நிலை மாறி, மாணவர் விசாவிற்கான கூடுதல் உள்நுழைவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வெளிநாட்டு மாணவர் தனது இந்தியப் படிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டாலோ அல்லது இந்தியாவிலிருந்து தானாகவே வெளியேற விரும்பினாலோ, அவர்களின் விசாக்களை ரத்துசெய்யும் அதிகாரம், வெளிநாட்டவர் பதிவு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உள்நுழைவு விசாவை, மாணவர் விசாவாக மாற்றவும், மாணவர் விசாவை, (அந்த மாணவர் ஒரு இந்தியரை மணந்துகொண்டால்) உள்நுழைவு விசாவாக மாற்றவும் தேவையான அதிகாரம் அந்த அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்கண்ட அதிகாரங்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டவர் பிரிவிடம் இருந்தன என்பது நினைவுகூறத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us