மீன்வள சார் ஆய்வாளர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு
மீன்வள சார் ஆய்வாளர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 02:25 PM
அ நிறம் | அளவு
சென்னை: மீன்வள சார்நிலை பணியின் சார் ஆய்வாளர்(Sub - Inspector of Fisheries) பதவியில், 24 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, கடந்தாண்டு பிப்ரவரி 10ம் தேதி நடத்தப்பட்டது.
அதன்பிறகு, தகுதியுள்ள நபர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவை செப்டம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்டவர்கள், எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
