தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதாரண மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்பணி: அப்துல்கலாம்

சாதாரண மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்பணி: அப்துல்கலாம்

சாதாரண மாணவர்களையும் சிறந்தவர்களாக உருவாக்குவது ஆசிரியர்பணி: அப்துல்கலாம்


UPDATED : செப் 06, 2014 12:00 AM

ADDED : செப் 08, 2014 08:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2014 12:00 AM ADDED : செப் 08, 2014 08:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையில், ஆசிரியர் தின விழா நடந்தது. பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தலைமை தாங்கினார். விழாவில் கலாம் பேசியதாவது: நான் பள்ளி படிப்பு படிக்கும்போது, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர், புறாவை படமாக வரைந்து அதைப்பற்றி விளக்கினார்.
அதுதான் என்னை, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்க துாண்டியது. அந்தளவிற்கு, எனது பள்ளி ஆசிரியர் புதிய யுக்தியுடன் பாடம் நடத்தினார்.

அதேபோல், ஆசிரியர் அனைவரும், புதிய பாணியில், புதிய யுக்தியில் பாடம் நடத்த வேண்டும். வெறும் கல்வியை கற்பிப்பது மட்டும் ஆசிரியர் பணி கிடையாது; அதைத் தாண்டி, வாழ்க்கை கல்வியை, மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். மாணவர்களிடையே, மனிதாபிமானத்தை, நல்ல பண்புகளை, ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். முதலில், மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.

சிறந்த மாணவர்களை, மேலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதை விட, சாதாரண, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுதான், ஆசிரியரின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். ஆசிரியர், தாயாகவும், தந்தையாகவும், சகோதர, சகோதரியாகவும் விளங்க வேண்டும்.

ஆசிரியர், மதம், ஜாதி, மொழி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்க வேண்டும். மாணவர்களின் வெற்றியை பாராட்டவும், கொண்டாடவும், ஆசிரியர் முன்வர வேண்டும். இவ்வாறு கலாம் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us