மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க மாணவர் தேர்வு
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க மாணவர் தேர்வு
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 11:13 AM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம்: பில்ராம்பட்டு நடுநிலைப் பள்ளி மாணவர் கோகுல், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார்.
முகையூர் ஒன்றியம், பில்ராம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர் கோகுல். இவர், கழிவு நீர் தொட்டியில் கலந்துள்ள விஷவாயுவைக் கண்டறியும் கருவி என்ற அறிவியல் சாதனத்தை உருவாக்கியுள்ளார். இவரது படைப்பு, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு பெற்றுள்ளது.
திருச்சியில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவர் கோகுலை, தலைமை ஆசிரியர் லீமாரோஸ், அறிவியல் ஆசிரியர் டோம்னிக் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
