தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுமதியற்ற பிரைமரி, நர்ஸரி பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு துவக்கம்

அனுமதியற்ற பிரைமரி, நர்ஸரி பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு துவக்கம்

அனுமதியற்ற பிரைமரி, நர்ஸரி பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு துவக்கம்


UPDATED : செப் 06, 2014 12:00 AM

ADDED : செப் 06, 2014 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2014 12:00 AM ADDED : செப் 06, 2014 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: அனுமதியற்ற பிரைமரி, நர்ஸரி பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நடுநிலை பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பு சென்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், சிலர் இன்னும் சான்று பெறாமல் உள்ளனர். இதுகுறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

விடுபட்ட மாணவ, மாணவியர், ஜாதி சான்று பெறுவது குறித்து, துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற கூட்டம் ஈரோட்டில் நடந்தது.

டி.இ.ஓ., உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு கல்வி, பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டது. தவிர, அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை அதிகரிக்க, பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மே மற்றும் ஜூன் மாதங்களில், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்தனர்.

வரும் ஆண்டுகளில் அரசு துவக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையை, அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றொரு கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தங்கள் பகுதியில் செயல்படும் அனுமதி பெறாத பிரைமரி, நர்சரி பள்ளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அதன் அறிக்கையை சமர்பிக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலா, ஒன்பது வீதிகள் என்ற கணக்கில், கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். அனுமதி பெறாத பிரைமரி பள்ளியில் உள்ள வகுப்புகள், கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை, அங்குள்ள வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் வார்டு, பகுதி விவரங்களை எவ்வாறு சேகரிப்பது? எத்தனை நாட்களுக்குள் முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும் என்பது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி, கல்வி அலுவலர்கள் கூறியதாவது: துவக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பகுதியில் உள்ள அனுமதியற்ற பிரைமரி மற்றும் நர்ஸரி பள்ளி, அவற்றில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் குறித்து, அரசு உத்தரவில் ஏதும் தெரிவிக்கவில்லை. எனினும், விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, அரசின் அறிவுரையை ஏற்று, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us