UPDATED : அக் 26, 2014 12:00 AM
ADDED : அக் 26, 2014 11:12 AM
பரமக்குடி: பரமக்குடியில் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தலைமையில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, பழனியாண்டி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சந்தியாகு வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் பேசியதாவது: மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற தலைமையாசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டும். மாநிலத்தில் முதல் மூன்று இடங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் இடம்பிடிக்க வேண்டும்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். காலாண்டு தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களை, தேர்ச்சிபெற வைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கழிப்பறை வசதி கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும். நவ., 7 ல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும், என்றார்.

