அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த கோரிக்கை
அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த கோரிக்கை
UPDATED : நவ 03, 2014 12:00 AM
ADDED : நவ 03, 2014 10:55 AM
உத்திரமேரூர்: ஆனம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தர, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனம்பாக்கம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 214 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டடத்தின் பின்புறத்தில் முட்புதர்கள் அடர்ந்துள்ளதால், பள்ளி வளாகத்தில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி விடுமுறை மற்றும் இரவு நேரங்களில், அப்பகுதி குடிமகன்கள், மது அருந்தும் இடமாக, பள்ளி வளாகத்தை பயன்படுத்துகின்றனர். மது அருந்த பயன்படுத்தும், டம்ளர், தண்ணீர் பாக்கெட் மற்றும் தின்பண்ட காகிதங்களை பள்ளி வளாகத்திலேயே போட்டு விட்டு செல்கின்றனர். இவ்விதமாக பள்ளி முழுவதும் குப்பையாக மாறுகிறது.
எனவே, இப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி, இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

