பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 10:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ப்ளஸ் 2,10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மதுரை ஒத்தக்கடை ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்குதெரு, அ.வள்ளாலபட்டி, திருவாதவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.
தன்னம்பிக்கை வளர்த்தல் குறித்து மதுரை கலெக்டர் சுப்ரமணியன், உளவியல் பிரச்னை குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏஞ்சலா இருதயசாமி பேசினர். தேர்வை பயமின்றி எதிர்கொள்வது, 100க்கு 100 சதவிகித மதிப்பெண் பெறுவது குறித்து பேராசிரியர்கள் உரையாற்றினர்.

