UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 10:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: பல்கலை கழக தேர்வில், ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியை சேர்ந்த விலங்கியல் பிரிவு 7 மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பல்கலைக்கழக தேர்வில், விலங்கியல் துறையை சேர்ந்த அஜிதா முதல் இடத்தையும், அனுசியா 3வது இடத்தையும், ஜெல்சிராணி 4வது இடத்தையும், சுகன்யா 5வது இடத்தையும், நாகஜோதி 7வது இடத்தையும், தாட்டம்மா 8வது இடத்தையும் அப்சத் 9வது இடத்தையும் பெற்றனர். மொத்தமுள்ள 10 இடங்களில் 7 இடங்களை இக்கல்லூரி மாணவியர் பெற்றனர்.

