பள்ளி அளவிலான கால்பந்து போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பள்ளி அளவிலான கால்பந்து போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 10:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியமேடு: பள்ளி அளவிலான, கால்பந்து போட்டிக்கு விண்ணப்பிக்க, அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் ஆதரவுடன், வடிவேல் நினைவு கால்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது. அதில், பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், விண்ணப்பிக்க நவ. 7ம் தேதி கடைசி நாளாகும். பங்கேற்க விரும்பும் அணிகள் chennai.dfa@gmail.com. என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
மேலும், நேரு விளையாட்டு அரங்கில் உள்ள, மாவட்ட கால்பந்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

