காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நோடல் மையங்கள் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நோடல் மையங்கள் அறிவிப்பு
UPDATED : நவ 05, 2014 12:00 AM
ADDED : நவ 05, 2014 11:35 AM
காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான, நோடல் மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
நடப்பாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 2015ம் ஆண்டு, மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெறவுள்ளது. தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள், கடந்த மாதம் 29ம் தேதி முதல் வரும் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நோடல் மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, ஆன்-லைன் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க, நோடல் மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது. கல்வி மாவட்ட வாரியான நோடல் மையங்கள்:
காஞ்சிபுரம் கல்வி மாவட்டம்
டாக்டர் பி.எஸ்.எஸ்., நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் (மகளிர் மட்டும்)
ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் (ஆண்கள் மட்டும்)
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர் (இரு பாலர்)
ஜே.ஜே.அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார் (இரு பாலர்)
செங்கல்பட்டு கல்வி மாவட்டம்
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு (மகளிர் மட்டும்)
செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு (ஆண்கள் மட்டும்)
அரசு மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம் (இரு பாலர்)
வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, தாம்பரம் (இரு பாலர்)

