sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அனைத்து விளையாட்டுக்களையும் ஒருங்கிணைக்க நவீனப்படுத்தப்படும் மைதானம்

/

அனைத்து விளையாட்டுக்களையும் ஒருங்கிணைக்க நவீனப்படுத்தப்படும் மைதானம்

அனைத்து விளையாட்டுக்களையும் ஒருங்கிணைக்க நவீனப்படுத்தப்படும் மைதானம்

அனைத்து விளையாட்டுக்களையும் ஒருங்கிணைக்க நவீனப்படுத்தப்படும் மைதானம்


UPDATED : நவ 09, 2014 12:00 AM

ADDED : நவ 09, 2014 12:04 PM

Google News

UPDATED : நவ 09, 2014 12:00 AM ADDED : நவ 09, 2014 12:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அனைத்து விளையாட்டுகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தை, 2.5 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தேனாம்பேட்டை மண்டலம், கோபாலபுரத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. மொத்தம், 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விளையாட்டு மைதானத்தை, சர்வதேச தரத்திற்கு உயர்த்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் கேட்டறிந்து, விரிவான ஆய்வுக்கு பிறகு, கட்டட கலை வல்லுனர்கள் மூலம், புதிய வரைபடம் ஒன்றும் தயாராகி உள்ளது.

* அதன்படி, பிரதான சாலையில் இருந்து நுழைய, வெளியே செல்ல என இரண்டு வாசல்கள்
* கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துமிடம்
* மைதானத்தின் மையப்பகுதியில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் பிட்ச்
* மைதானத்தின் வடக்கு, தெற்கு முனைகளில், கால்பந்து கம்பிகள்
* பக்கவாட்டில், கூடைபந்து, ஸ்கேட்டிங், கைப்பந்து, கிரிக்கெட் வலை பயிற்சி, சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், நவீன உடற்பயிற்சி கூடம், ஸ்குவாஷ் மையம்
* மைதானத்தின் ஒரு பகுதியில், 2,000 பேர் அமரும் வகையில், டென்சில் தகடுடன் கூடிய, பார்வையாளர் மாடம்
* மைதானத்தை சுற்றிலும் நடைப்பயிற்சி, ஓட்ட பயிற்சி செய்ய தனி பாதை

இந்த அனைத்து வசதிகளும் அடங்கிய விரிவான வரைபடம் தயார் நிலையில் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த 2.5 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "தனியார் நிலங்களை தானமாக பெற்று மேம்படுத்தவும் மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி விளையாட்டு மைதானமும், விரைவில் சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது" என்றார்.






      Dinamalar
      Follow us