முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு!
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு!
UPDATED : நவ 09, 2014 12:00 AM
ADDED : நவ 09, 2014 12:07 PM
புதுச்சேரி: கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை படைத்த முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர் மற்றும் இளநிலை, முதுநிலை கல்லுாரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், தேசிய மற்றும் உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
கல்வி ஊக்கத்தொகை மற்றும் ரொக்கப்பரிசு பெற, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதி உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர்கள், அதற்கான விண்ணப்பத்தை முப்படை நலத்துறையில் பெற்று, வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள், அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் விதவையர்கள், அதற்கான விண்ணப்பத்தை காரைக்கால் மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல நிர்வாக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். காலம் கடந்து சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

