UPDATED : நவ 10, 2014 12:00 AM
ADDED : நவ 10, 2014 11:24 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியின் பெரு நிறுவன சமூக பொறுப்பு அமைப்பின் சார்பாக, மாணவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தென் மண்டல அளவிலான வினாடி வினா போட்டி அனைத்து மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மெட்ரிக்., பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரையில் மார்வல் 2014 வினாடி வினா நடத்தப்பட்டது. முதல் 2 சுற்றுகள் திருநெல்வேலி ஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளியிலும், தூத்துக்குடி பி.எம்.சி., மெட்ரிக்., பள்ளியிலும், மதுரை காந்தி மியூசியத்திலும் நடந்தன. இறுதி சுற்று அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில் நடந்தது.
மேலச்சின்னையாபுரம் தேவசகாயம் கல்வி குழும நிறுவனர் எடிசன் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். திருநெல்வேலி ஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளி மாணவர்கள் முதல் பரிசாக 15 ஆயிரத்தையும், மதுரை ஜீவனா பள்ளி மாணவர்கள் 2 ம் பரிசாக 9 ஆயிரத்தையும் வென்றனர்.

