1,727 உதவி டாக்டர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 1
1,727 உதவி டாக்டர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 1
UPDATED : நவ 10, 2014 12:00 AM
ADDED : நவ 10, 2014 12:57 PM
சென்னை: அரசு மருத்துவமனைகளுக்கு 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,176 டாக்டர்களை நியமிக்க, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள், பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், 36 சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி மருத்துவர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதில் சேர விரும்புவோர், டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

