sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பணி நிரந்தரம் ஆகாததால் வேலையை உதறிய 2000 பகுதிநேர ஆசிரியர்கள்

/

பணி நிரந்தரம் ஆகாததால் வேலையை உதறிய 2000 பகுதிநேர ஆசிரியர்கள்

பணி நிரந்தரம் ஆகாததால் வேலையை உதறிய 2000 பகுதிநேர ஆசிரியர்கள்

பணி நிரந்தரம் ஆகாததால் வேலையை உதறிய 2000 பகுதிநேர ஆசிரியர்கள்


UPDATED : நவ 10, 2014 12:00 AM

ADDED : நவ 10, 2014 01:04 PM

Google News

UPDATED : நவ 10, 2014 12:00 AM ADDED : நவ 10, 2014 01:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.

வேலையை உதறிவிட்டு...

2011ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாறியதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 500 பேர், பகுதிநேர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில், மூன்று அரைநாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். அரசுப் பணி என்பதால், ஒருசில ஆண்டுகளில் பணி நிரந்தரமாகி விடும் என நினைத்து, நல்ல சம்பளத்தில் இருந்த பலரும் அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர ஆசிரியர் பணியில் சேர்ந்தனர்.

மத்திய அரசு நிதி:உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசைஆசிரியர் உள்ளிட்டோரும், இந்தப் பகுதிநேர பணியில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு நிதியில் இருந்து அனைவருக்கும் கல்வி இயக்ககம் வழங்கி வருகிறது. பணியில் சேர்ந்து மூன்றரை ஆண்டுகள் கடந்தும், பணி நிரந்தரமாவதற்கான அறிகுறி தெரியாததால், பலரும் விரக்தி அடைந்தனர். பகுதிநேர ஆசிரியர் அமைப்புகள், தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும், அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்த விரக்தியால், இதுவரை, 2,000 பேர், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பழைய வேலைக்கு திரும்பி உள்ளனர். நிரந்தர பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் பெற வழி உள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு அதுவும் இல்லை. இதனால், நீண்ட தொலைவு பயண பிரச்னையாலும், பலர் வேலையை விட்டுள்ளனர்.

இதுகுறித்து, கோவையைச் சேர்ந்த உஷா கூறியதாவது: சொந்த ஊர், திருச்சி; புகுந்த இடம் கோவை. ஏற்கனவே, ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், அரசு வேலையாக இருக்கிறதே பணி நிரந்தரமாகும் என்ற ஆவலில், வேலையில் சேர்ந்தேன்.

உடலும், மனமும்...

திருச்சி, முட்டத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர் வேலை. வாரத்தில், மூன்று நாள் திருச்சியில் தங்குவதும், பின், கோவை செல்வதுமாக இருந்தேன்; முடியவில்லை. இரண்டாவது முறையாக, கர்ப்பம் ஆன நிலையில், நீண்ட துார பயணத்தால், அபார்ஷன் ஆகிவிட்டது. இதனால் உடலும், மனமும் பாதிக்கப்பட்டு, கடைசியில் வேலையை உதறினேன். இவ்வாறு உஷா கூறினார்.

வாய்ப்பு இல்லை: அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே 2,000 பணியிடம் காலியாக உள்ளது. 1,500க்கும் மேற்பட்டோர் வேலையை ராஜினாமா செய்தது உண்மையே. பகுதிநேர ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை" என்றார்.






      Dinamalar
      Follow us