ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் ஜெயித்துக்காட்டுவோம் - 2014 நிகழ்ச்சி
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடியில் ஜெயித்துக்காட்டுவோம் - 2014 நிகழ்ச்சி
UPDATED : நவ 15, 2014 12:00 AM
ADDED : நவ 15, 2014 10:16 AM
ராமநாதபுரம்: தினமலர் சார்பில் ராமநாதபுரத்தில் இன்றும்(நவ.,15), பரமக்குடியில் நாளையும்(நவ.,16) 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான ஜெயித்துக்காட்டுவோம் - 2014 நிகழ்ச்சி நடக்கிறது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு டி.வி.ஆர்., அகாடமி, தினமலர், கல்வி மலர் சார்பில், மதுரை ரோட்டில் உள்ள எம்.ஜி., மகாலில் இன்று நடக்கிறது. பாடங்களை எளிதாக படிப்பது எப்படி? தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற தெரிந்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களால் கருத்துகள் வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு: காலை 9:30 முதல் மாலை 12:30 மணி வரை
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
பிளஸ் 2: மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் குறித்து கருத்து வழங்கப்படும்.
பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட், பாரதியார் பள்ளி அருகில் உள்ள தியாகி முத்துச்சாமி அரங்கத்தில் நாளை (நவ,.16) நடைபெறும் ஜெயித்துக் காட்டுவோம் - 2014 நிகழ்ச்சியில், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

