சிவகாசி மற்றும் ராஜபாளையத்தில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
சிவகாசி மற்றும் ராஜபாளையத்தில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
UPDATED : நவ 15, 2014 12:00 AM
ADDED : நவ 15, 2014 10:22 AM
சிவகாசி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வுகளில் எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம் என மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் இன்றும்(நவ.,15), ராஜபாளையம் தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு நினைவு திருமண மண்டபத்தில் நாளையும்(நவ.,16)நடக்கிறது.
டி.வி.ஆர்.,அகாடமி மற்றும் தினமலர் கல்வி மலர் வழங்கும் இந்நிகழ்ச்சியில் பொதுத்தேர்வுகளில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை, முழு மதிப்பெண் பெறுவதற்கான முக்கிய வினாக்கள் என்னென்ன, மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி, பயமின்றி தேர்வை சந்திப்பது மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஏராளமான டிப்ஸ்களை, ஆசிரிய நிபுணர்கள் வழங்குகின்றனர்.
சிவகாசியில் இன்று காலை, 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும், பிற்பகல், பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நடக்கும் இதில் ஆசிரியர்கள் குறிப்புகளை வழங்குகின்றனர். தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கே. காளியப்பன் பேசுகிறார். இந்நிகழ்ச்சியை சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி, சிவகாசி ரூபி ஸ்பார்க்லர்ஸ், விருதுநகர் ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரி, சிவகாசி ரங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி, பூர்விகா மொபைல் வேர்ல்டு இணைந்து வழங்குகின்றன.
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசிரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு நினைவு திருமண மண்டபத்தில் நாளை(நவ.,16)காலை 9.30 மணி முதல் 12.30 வரை 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் ஆங்கிலம் பாடம் குறித்து ராஜபாளையம் என்.ஏ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.ஜெயலட்சுமி, கணிதம் பாடம் குறித்து மம்சாபுரம் சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சி.சின்னத்தம்பி, அறிவியல் பாடம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.வி.சோமசுந்தரம், சமூகஅறிவியல் பாடம் குறித்து ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர்.தர்மராஜா ஆண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெ.ராஜமகேஸ்வரன் ஆகியோர் குறிப்பு வழங்குகின்றனர்.
பிளஸ் 2: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நிகழ்ச்சி நடக்கிறது. ஆங்கிலம் பாடம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பி.ராஜேஸ்வரி, கணிதப் பாடம் குறித்து எஸ்.ராமசந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் என்.சுந்தர்ராஜன், இயற்பியல் பாடம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.கண்ணன், வேதியியல் பாடம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பி.சக்திவேல் பேசுகின்றனர்.
தன்னம்பிக்கை ஊட்டும் வகையில், சேத்தூர் மனநல டாக்டர் பி.அர்ஜூனன் பேசுகிறார். பங்கேற்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும். மாணவர்களே வாருங்கள்;அனுமதி இலவசம்.

