சேத்தியாத்தோப்பு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு குவிந்த மாணவர்கள்!
சேத்தியாத்தோப்பு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு குவிந்த மாணவர்கள்!
UPDATED : நவ 16, 2014 12:00 AM
ADDED : நவ 16, 2014 11:02 AM
கடலூர்: தினமலர் மற்றும் கல்விமலர் சார்பில் சேத்தியாத்தோப்பில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் தினமலர் மற்றும் கல்விமலர் சார்பில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வி நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பு கே.பி.டி., திருமண மகாலில் நேற்று நடந்தது.
காலை 6:00 மணி முதலே, மாணவ, மாணவிகள் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்கு ஆர்வமுடன் குவியத் துவங்கினர். 8:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து பாடவாரியாக அனுபவமிக்க ஆசிரியர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
தமிழ்ப் பாடத்திற்கு காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுருகுல பள்ளி ஆசிரியர் வெங்கடேசன், ஆங்கிலம் பாடத்திற்கு புவனகிரி அருணாசலம் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் லட்சுமண ராவ், கணக்குப் பாடத்திற்கு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தங்கசாமி, அறிவியல் பாடத்திற்கு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவி, சமூக அறிவியல் பாடத்திற்கு கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி ஆசிரியர் இலியாஸ் டேவிட் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாணவ, மாணவிகளுக்கு குறிப்பெடுக்க வசதியாக நோட்டு, பேனா, முக்கிய வினாக்கள் அடங்கிய புளூபிரின்ட், உடம்பும் மனசும் நல்லா இருக்கணும் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

