திருவெண்ணெய்நல்லூரில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழா
திருவெண்ணெய்நல்லூரில் தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் கல்வித் திருவிழா
UPDATED : நவ 22, 2014 12:00 AM
ADDED : நவ 22, 2014 12:16 PM
திருவெண்ணெய்நல்லூர்: தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா பெரியசெவலையில் நாளை(நவம்பர் 23) நடக்கிறது.
தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித்திருவிழா நிகழ்ச்சி பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் சமுதாயக் கூடத்தில் நாளை நடக்கிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க கூடிய வகையில் தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது.
கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, மாதிரி வினா-விடை, உடம்பும் மனுசும் நல்லா இருக்கணும் உள்ளிட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம். பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம்.
மாணவ, மாணவியர் பள்ளி சீருடையில் பங்கேற்க வேண்டும். திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்திலிருந்து காலை 7:00 மணி முதல் நேரு மேல்நிலைப் பள்ளி சார்பில் நிகழ்ச்சி அரங்கிற்கு இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.
