பள்ளி மாணவர்களுக்கு போலீசார் பணி முறைகள் குறித்து விளக்கம்
பள்ளி மாணவர்களுக்கு போலீசார் பணி முறைகள் குறித்து விளக்கம்
UPDATED : நவ 25, 2014 12:00 AM
ADDED : நவ 25, 2014 10:23 AM
முத்தியால்பேட்டை: உலக குழந்தை வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் போலீசார் பணி முறைகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
உலக குழந்தை வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை காவல்துறை சார்பில், கடந்த 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன்றன. நேற்று காலை, பிராட்வே பகுதி தனியார் பள்ளியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 25 பேர், முத்தியால்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாரின் பணிகள், சட்ட நடைமுறைகள் குறித்து, அவர்களுக்கு போலீசார் விளக்கினர். காவல்துறை எங்கள் நண்பர்கள் மற்றும் என் பார்வையில் காவல்துறை என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டியும், வினாடி வினா நிகழ்ச்சியும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வெற்றிபெறும் தலா, இரண்டு மாணவர்கள், வரும் 29ம் தேதி போலீஸ் கமிஷனரகத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதற்காக, காவல் நிலையத்திற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியரை காவல்நிலையம் அழைத்து சென்று, போலீசாரின் பணிகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.
