தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச. 7 ல் ராமநாதபுரத்தில் தினமலர் சார்பில் குரூப் 4 தேர்வு மாதிரித் தேர்வு

டிச. 7 ல் ராமநாதபுரத்தில் தினமலர் சார்பில் குரூப் 4 தேர்வு மாதிரித் தேர்வு

டிச. 7 ல் ராமநாதபுரத்தில் தினமலர் சார்பில் குரூப் 4 தேர்வு மாதிரித் தேர்வு


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 12:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு எழுதப்போகும் வாசகர்கள் நலன்கருதி, டிச. 7 ல் ராமநாதபுரத்தில் தினமலர் சார்பில் மாதிரித் தேர்வு நடக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 4,963 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை டிச., 21ல் நடத்துகிறது. இதில் இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகள் அடங்கும்.

அனைத்து பணியிடங்களுக்கும் கல்வித் தகுதி 10ம் வகுப்பு. சுமார் 15 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதிலிருந்து இத்தேர்வுக்கு, எந்தளவு இளைஞர்கள் இடையே போட்டி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முறை: தமிழ் மொழியை தேர்வு செய்தவர்களுக்கு, பொதுத்தமிழ் பிரிவில் 100 கேள்விகளும், பொதுஅறிவு பிரிவில், (பொது அறிவு 75 + திறனறிவு தேர்வு 25)100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். வினாக்கள், அப்ஜக்டிவ் அடிப்படையில் கேட்கப்படும். மொத்த கேள்விகள் 200; மதிப்பெண்கள் 300; ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்.

நெகடிவ் மதிப்பெண் கிடையாது. 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இடஒதுக்கீடு ஆகியவை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமை உண்டு. நேர்காணல் இல்லாமல், முற்றிலும் எழுத்து தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால், தேர்வை நன்றாக எழுதினால் அரசு வேலை உறுதி.

எனவே இந்த தேர்வில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட வாசகர்கள் வென்று அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக, தினமலர் இலவசமாக மாதிரித்தேர்வு நடத்துகிறது. தினமலர் நடத்துவது போட்டி தேர்வு அல்ல; மாறாக உங்களை சுய மதிப்பீடு செய்து கொள்ள உதவும்.

மூன்று மணி நேரத்தில் எப்படி தேர்வை வேகமாக எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சியாக அமையும். அரசு வேலைக்கான தேர்வு எழுதுவதில் உள்ள பயம் நீங்கி, தன்னம்பிக்கை பெற்று நீங்கள் தயாராக வாய்ப்பாக அமையும். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு தொடர்பான முழுவிபரம் நாளை தினமலர் நாளிதழில் வெளியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us