தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவம்பர் 29ம் தேதி கோவையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

நவம்பர் 29ம் தேதி கோவையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

நவம்பர் 29ம் தேதி கோவையில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 12:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 12:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தினமலர் நாளிதழின் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (29ம் தேதி), பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுநாளும் (30ம் தேதி), கோவையில் நடத்தப்படுகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் நலனுக்காக, தினமலர் நாளிதழ் வினா - விடை பகுதி, தகவல் சுரங்கம், அறிவியல் ஆயிரம், கம்ப்யூட்டர் மலர் என பல பகுதிகளை வெளியிட்டு வருகிறது. மாணவ, மாணவியர், பொதுத் தேர்வில் சாதிக்க துாண்டும் வகையில், தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமி சார்பில், ஆண்டுதோறும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, நாளையும் (29ம் தேதி), நாளை மறுநாளும் (30ம் தேதி), கோவை அவிநாசி சாலையில் உள்ள சி.ஐ.டி., ஆடிட்டோரியத்தில் நடத்தப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு, 29ம் தேதி காலை 9:00 மணி முதலும், ஆங்கில வழி மாணவர்களுக்கு, மதியம் 1:00 மணி முதலும், பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, 30ம் தேதி காலை 9:00 மணி முதலும், கலைப் பிரிவு மாணவர்களுக்கு, மதியம் 1:00 மணி முதலும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஒவ்வொரு பாடத்துக்கும், தேர்ந்த ஆசிரியர்கள் மூலம், தேர்வெழுதும் முறை, கேட்கப்பட இருக்கும் முக்கிய கேள்விகள், எளிய முறையில் சாதிப்பது குறித்து விளக்க உள்ளனர். தேர்வுக்கான ப்ளூ பிரிண்ட் இலவசமாக வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us