தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவம்பர் 29ம் தேதி விருதுநகரில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

நவம்பர் 29ம் தேதி விருதுநகரில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

நவம்பர் 29ம் தேதி விருதுநகரில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் எவ்வாறு படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம் என மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கும் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை(நவ.,29) நடக்கிறது.

டி.வி.ஆர்.,அகாடமி மற்றும் தினமலர் கல்வி மலர் வழங்கும் இந்நிகழ்ச்சியில் பொதுத்தேர்வுகளில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை, முழு மதிப்பெண் பெறுவதற்கான முக்கிய வினாக்கள் என்னென்ன, மாணவர்கள் படித்ததை நினைவில் வைத்துக் கொள்வது எப்படி, பயமின்றி தேர்வை சந்திப்பது மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஏராளமான டிப்ஸ்களை ஆசிரிய நிபுணர்கள் வழங்குகின்றனர்.

பத்தாம் வகுப்பு: காலை 9.30 மணி 12.30 மணி வரை 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி நடக்கிறது. ஆங்கில பாடம் குறித்து விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை டி.மகேஸ்வரி, கணித பாடம் குறித்து அதே பள்ளி ஆசிரியை ஆர்.இன்பலதா, அறிவியல் பாடம் குறித்து போத்திரெட்டிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ரமேஷ், சமூக அறிவியல் பாடம் குறித்து விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஆர்.சாந்தி குறிப்புகளை வழங்குகின்றனர்.

பிளஸ் 2: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நிகழ்ச்சி நடக்கிறது. ஆங்கில பாடம் குறித்து சாத்தூர் எஸ்.எச்.என்., எட்வர்டு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எம்.முருகேசன், கணித பாடம் குறித்து பாப்பநாயக்கன்பட்டி எஸ்.கே.வி.,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் எஸ்.எம்., ஷேக் மஹபூப், இயற்பியல் பாடம் குறித்து விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.சாந்தி, வேதியியல் பாடம் குறித்து திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சி.ஜான் வெஸ்லி பேசுகின்றனர்.

இரண்டு நிகழ்ச்சிகளிலும், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அருப்புக்கோட்டை டாக்டர் எஸ்.ஏ.,சாதலி பேசுகிறார். பங்கேற்கும் மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கப்படும். மாணவர்களே வாருங்கள்; அனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us