தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

சம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

சம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்


UPDATED : நவ 29, 2014 12:00 AM

ADDED : நவ 29, 2014 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2014 12:00 AM ADDED : நவ 29, 2014 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சம்பள கணக்கு எண் வழங்காமல் அரசு உத்தரவு வழங்கப்பட்டதால், சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பலர் தேனி மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் பணியில் சேர்ந்தனர். தேனி மாவட்டத்தில் பல புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதற்கான அரசு உத்தரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவில் சம்பள கணக்கு எண் வழங்கப்படவில்லை. இதனால் எந்த கணக்கில் சம்பளம் வழங்குவது என்பதில் தலைமை ஆசிரியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பளம் வழங்காமல், அரசு வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனால் மூன்று மாதங்கள் ஆகிய நிலையிலும் புதியதாக பொறுப்பேற்ற ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதன்மைக்கல்வி அலுவலர் இந்த பிரச்னையில் தலையிட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் வலியுறுத்தி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us