தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவாரூர் மத்திய பல்கலையில் நிர்வாக சிக்கல்

திருவாரூர் மத்திய பல்கலையில் நிர்வாக சிக்கல்

திருவாரூர் மத்திய பல்கலையில் நிர்வாக சிக்கல்


UPDATED : டிச 02, 2014 12:00 AM

ADDED : டிச 02, 2014 11:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2014 12:00 AM ADDED : டிச 02, 2014 11:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலையில், துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாமல், நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்திய பல்கலை துவக்கப்பட்டபோது, போதிய இடம் இல்லாததால், ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. பின், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில், 10 கி.மீ., தொலைவில் உள்ள நீலக்குடியில், 100 ஏக்கர் பரப்பில், பலகோடி ரூபாய் செலவில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், அந்த இரு முக்கிய பதவிகளும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால், முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல், நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர் கூறுகின்றனர். மத்திய பல்கலையின் சிறப்பை பாதுகாத்திடும் வகையில், துணைவேந்தர், பதிவாளர் மற்றும் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளுக்கு, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us