பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நுாலகத்தை திறக்க கோரிக்கை
பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நுாலகத்தை திறக்க கோரிக்கை
UPDATED : டிச 03, 2014 12:00 AM
ADDED : டிச 03, 2014 10:31 AM
மணப்பாக்கம்: பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் நுாலகத்தை திறக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மணப்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலந்துார் மண்டலம், மணப்பாக்கம் பிரதான சாலையில், கடந்த 2009ல், 3 லட்சம் ரூபாய் செலவில், நுாலகம் ஒன்று திறக்கப்பட்டது. ஒரு மாதமே முழு செயல்பாட்டில் இருந்த இந்த நுாலக கட்டடத்தை சுற்றி சிலர், சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டட பொருட்களை அடுக்கி வைத்தனர்.
இதனால், வாசகர்கள் வருகை குறைந்து, நாளடை வில் நுாலகம் முடங்கி விட்டது. பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அந்த நுாலக கட்டடத்தை புதுப்பித்து திறக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "இதுகுறித்து, அதிகாரிகளை பார்த்து பலமுறை கோரிக்கை வைத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், நுாலகவரி தனியாக வசூல் செய்கின்றனர்" என்றனர்.
