தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை விடுதி மாணவர்கள் வெற்றி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவை விடுதி மாணவர்கள் வெற்றி
UPDATED : டிச 03, 2014 12:00 AM
ADDED : டிச 03, 2014 10:35 AM
கோவை: மாநில விளையாட்டுப் போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, கோவை விடுதி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலத்தில், கடந்த 26ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரை, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் விளையாட்டு விடுதி மாணவர்கள், ஜிம்னாஸ்டிக் பிரிவில், திறமையை நிரூபித்துள்ளனர்.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், விடுதி மாணவன், டிஜெக், ஆல்-ரவுண்டர் சாம்பியன், வால்ட், பேரலல் பார், ரிங்ஸ், பம்மல் ஹார்ஸ், ஹரிசாண்டல் பார் ஆகிய பிரிவுகளில், தங்கம் பெற்றார். 17 வயதுக்கு உட்பட்ட டீம் சாம்பியன் ஷிப் பிரிவில், ஆதவா, அன்பழகன், அருண்பாண்டியன், யோகேஷ்வர், பூபாலன் ஆகியோர் தங்கம் வென்றனர்.
17 வயதுக்கு உட்பட்டதில், ஆதவா, ஆல்-ரவுண்டர் சாம்பியன்ஷிப், பேரலல் பார், பம்மல் ஹார்ஸ், ப்ளோர் எக்சர்சைஸ், ஆகியவற்றில் முதலிடம், ரிங்ஸ், வால்ட் ஆகியவற்றில் இரண்டாமிடம் பெற்றார்.
அன்பழகன், ஹரிசாண்டல் பார் பிரிவில் இரண்டாமிடம், ப்ளோர், ஆல்-ரவுண்டர் சாம்பியன்ஷிப், பேரலல் பார் பிரிவில் மூன்றாமிடம், யோகேஷ்வர், பம்மல் ஹார்ஸ், ஹரிசாண்டல் பார்ஸ், ரிங்ஸ் ஆகிய பிரிவில், யோகேஸ்வர் மூன்றாமிடம், பூபாலன், வால்ட்டில் மூன்றாமிடம் பெற்றனர். மொத்தமாக, 15 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
