மாவட்ட அளவிலான யோகா போட்டியில் 78 பள்ளிகள் பங்கேற்பு
மாவட்ட அளவிலான யோகா போட்டியில் 78 பள்ளிகள் பங்கேற்பு
UPDATED : டிச 04, 2014 12:00 AM
ADDED : டிச 04, 2014 12:50 PM
கோவை: கோவை சத்தி சாலையில் அமைந்துள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில், மாவட்ட அளவிலான யோகா சாம்பியன் ஷிப் போட்டி நடந்தது.
மாவட்டத்தில் இருந்து 78 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையான பிரிவில், பிரஸ் காலனி தம்பு நர்சரிப் பள்ளியின் அருண்மொழி, காளப்பட்டி சந்திரா காந்தி பப்ளிக் பள்ளியின் இளந்தழி, பீளமேடு ஜி.ஆர்.டி., மெட்ரிக்., பள்ளியின் ஜமுனாஸ்ரீ, முதல் மூன்று இடங்கள் பெற்றனர்.
நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான பிரிவில், இருகூர் விவேகானந்தா கல்வி நிலையத்தின் லோக சவுமியா, காளப்பட்டி சுகுணா பிப் பள்ளியின் மதுமிதா, பீளமேடு ஜி.ஆர்.ஜி., பள்ளியின் சுமித்ரா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஏழாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பிரிவில், சாமிசெட்டிப்பாளையம் பி.யு.எம்., பள்ளியின் கார்த்திகேயன், கோவில்பாளையம் சுதந்திரா பள்ளியின் விக்னேஷ்வரன், கல்லாறு சச்சிதானந்தா பள்ளியின் முகிலன், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 பிரிவில், பீளமேடு ஜி.ஆர்.ஜி., மெட்ரிக்., பள்ளியின் கிருஷ்ணகுமார், பீளமேடு ரங்கசாமி நாயுடு பள்ளியின் சக்தி வசந்தன், சுகுணா பிப் பள்ளியின் சிவேந்திர தனுஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். இவர்களுக்கு, கல்லூரி நிறுவனர் சுகுமாரன், முதல்வர் கதிரவன் பதக்கம் வழங்கினர்.
