வட்டார விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
வட்டார விளையாட்டு போட்டியில் அரசு பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்
UPDATED : டிச 05, 2014 12:00 AM
ADDED : டிச 05, 2014 11:26 AM
திருப்பூர்: வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில், பெருந்தொழுவு அரசு பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
நாச்சிபாளையம் ஆசாத் மெட்ரிக் பள்ளியில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. 40க்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் அரசு பள்ளி அணிகள் பங்கேற்றன. பள்ளி முதல்வர் லதா வரவேற்றார். திருப்பூர் கிழக்கு ரோட்டரி கிளப் தலைவர் பெரியசாமி, போட்டியை துவக்கி வைத்தார்.
போட்டி முடிவுகள்: வாலிபால் ஜூனியர் பிரிவு - மைக்ரோகிட்ஸ் பள்ளி; சீனியர் பிரிவு - வேலவன் பள்ளி; சூப்பர் சீனியர் பிரிவு - வித்ய விகாசினி பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. கால்பந்து ஜூனியர் பிரிவு - பிளோட்டோஸ் அகாடமி; சீனியர் பிரிவு - பிரண்ட்லைன் பள்ளி; சூப்பர் சீனியர் பிரிவு - ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
எறிபந்து ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு - பாரத் மெட்ரிக் பள்ளி; சூப்பர் சீனியர் பிரிவு - பெருந்தொழுவு அரசு பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. கபடி ஜூனியர் பிரிவு - ஜெயந்தி மெட்ரிக் பள்ளி; சீனியர் பிரிவு - பெருந்தொழுவு அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது. முடிவில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெருந்தொழுவு அரசு பள்ளி அணி தட்டிச்சென்றது.
வெற்றிபெற்ற அணிகளுக்கு, தாளாளர் அப்துல்நாசர் பரிசு வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம், ரவிக்குமார், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் எட்வின்ராஜா நன்றி கூறினார்.
