UPDATED : டிச 05, 2014 12:00 AM
ADDED : டிச 05, 2014 11:29 AM
திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற, திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி, பழனியம்மாள் பள்ளி, நஞ்சப்பா பள்ளி, குமார் நகர் மாநகராட்சி பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி, புதுராமகிருஷ்ணாபுரம் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில், மாலை 4.30 முதல் 5.30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.
மாலை நேரங்களில் மாநகராட்சி பகுதிகளில், கொசு தொல்லை அதிகமாக உள்ளது. சாக்கடை அடைப்பு, குப்பை தேக்கத்தால் கொசு பெருக்கம் பரவலாக காணப்படுகிறது. சிறப்பு வகுப்பு நடத்தப்படும் அறைகளில், கொசுக்கடியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மின் விசிறிகளை ஓட விட்டாலும், கொசுவர்த்தி கொளுத்தினாலும், கொசுக்களை விரட்ட முடியவில்லை.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"பள்ளி வளாகங்களில் காலை, மாலை நேரங்களில் கொசு மருந்து தெளிக்கவும், கொசு மருந்து புகை அடிக்கவும் மாநகராட்சி சுகாதாரத்துறை முன்வர வேண்டும்" என்றார்.
