UPDATED : டிச 05, 2014 12:00 AM
ADDED : டிச 05, 2014 01:04 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகள் அதிகளவில் உள்ளன. அரசு விடுதிகள் தவிர அனுமதிபெற்ற தனியார் விடுதிகள் 31 உள்ளன.
அனுமதி பெறாத விடுதிகள் அதிகளவில் உள்ளன. இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. வசதிகளும் இல்லை. இதுகுறித்து புகார் எழுந்ததை தொடர்ந்து, சமூகநலத்துறை, கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து விடுதிகளை ஆய்வுசெய்து அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
