தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழைய கட்டட பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம்

பழைய கட்டட பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம்

பழைய கட்டட பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றம்


UPDATED : டிச 05, 2014 12:00 AM

ADDED : டிச 05, 2014 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2014 12:00 AM ADDED : டிச 05, 2014 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மேரி ஹால் கட்டடம் இடிந்து விழுந்ததன் எதிரொலியாக, பழமையான கட்டடத்தில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் பழமையான கட்டடங்களில் இயங்கி வந்த அரசு பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு, அப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள், அவர்கள் ஏற்னவே பயின்ற பள்ளிகளின் அருகில் உள்ள அரசு பள்ளிகளில், தங்கள் படிப்பை இன்று (5ம் தேதி) முதல் தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கலவை கல்லுாரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பெருமாள் கோவில் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்திற்கும், பெருமாள் கோவில் அரசு ஆரம்ப பள்ளி மாணவர்கள், புதுப்பாளையம் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவரை, சைமன் கர்தினால் லுார்துசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் இயங்கி வந்த வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளியின் 9 மற்றும் 10ம் வகுப்புகள், வீரமாமுனிவர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளன.

துமாஸ் வீதியில் இயங்கி வந்த பான்சியோனா பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி மாணவிகள், சைமன் கர்தினால் லுார்துசாமி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஷிப்ட் முறையில், காலை 8:30 மணி முதல், 12:50 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் இயங்கும்.

கலவைக் கல்லுாரி பிரெஞ்சு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், சைமன் லுார்துசாமி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டு, ஷிப்ட் முறையில், மதியம் 1:30 மணி முதல், 5:50 மணி வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us