தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்


UPDATED : டிச 08, 2014 12:00 AM

ADDED : டிச 08, 2014 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2014 12:00 AM ADDED : டிச 08, 2014 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 4,963 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை டிச., 21ல் நடத்துகிறது. இதில் இளநிலை உதவியாளர், வரி தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகள் அடங்கும்.

அனைத்து பணியிடங்களுக்கும் கல்வித் தகுதி 10ம் வகுப்பு. 13 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். வாசகர்கள் அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக தினமலர் நாளிதழ் மாதிரி தேர்வை மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.

இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:

சுவாதிகா (பி.இ., இரண்டாம் ஆண்டு மாணவி, மதுரை): இதுவரை குரூப் 4 தேர்வு எழுதியது இல்லை. இத்தேர்வு மூலம் வினாத்தாள் அமைப்பு, மாதிரி கேள்விகள் குறித்து தெளிவான விளக்கம் கிடைத்தது. குறிப்பாக பொதுஅறிவு வினா பகுதியில் எவ்வாறு கேள்விகள் இடம் பெறும் என்பது தெளிவாக புரிந்தது.

மகேஸ்வரி (பி.பி.ஏ., இறுதிஆண்டு மாணவி, மதுரை): குரூப் 4 தேர்வுக்காக இதுவரை என்னை தயார்படுத்தி கொண்டதன் மூலம் இந்த மாதிரி தேர்வை எழுதினேன். இதில் கிடைத்த அனுபவத்தை வைத்து டிச.,21ல் நடக்கும் தேர்வை எழுத இன்னும் எவ்வாறு கூடுதலாக தயாராக வேண்டும் என்று புரிந்தது. தேர்வு எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது. இதில் பங்கேற்றதன் மூலம் அது நீங்கியது. இதற்காக தினமலர் நாளிதழுக்கு நன்றி.

சண்முகராஜா (மெடிக்கல் பிரதிநிதி, மதுரை): இதுவரை மூன்று முறை டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதியுள்ளேன். அந்த தேர்வுகள் எழுதியது போன்ற உணர்வே இந்த மாதிரி தேர்வும் எழுதும்போதும் இருந்தது. குரூப் 4 தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரம் உள்ள நிலையில் இதுபோன்று மாதிரி தேர்வில் பங்கேற்றது பயனுள்ளதாக இருந்தது. தேர்வு எழுதுவதற்கு முன் எங்களை சுயமதிப்பீடு செய்துகொள்ளும் வாய்ப்பாக இத்தேர்வு அமைந்தது.

காயத்ரி (பி.ஏ., பட்டதாரி, திண்டுக்கல்): அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு இணையாக இம்மாதிரி தேர்வும் இருந்தது. இதில் பங்கேற்றதன் மூலம் வரும் 21ல் நடக்கும் தேர்வை பயமின்றி எதிர்கொள்ளும் நம்பிக்கை கிடைத்துள்ளது. தினமலர்  நாளிதழில் போட்டித் தேர்வு வினா விடை பகுதியை தொடர்ந்து படிக்கிறேன். அதில் கேட்கப்பட்ட வினாக்கள் இத்தேர்வில் அதிகம் இடம்பெற்றன. தேர்வு நல்ல வழிகாட்டியாக அமைந்தது.

அருண்குமார் (பி.இ., பட்டதாரி, தேனி): குரூப் 4 தேர்வு எழுதுவது இது முதல்முறை. மாதிரி தேர்வு மூலம் இன்னும் எங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. வினாத்தாள் அமைப்பும் புரிந்துள்ளது. இத்தேர்வில் பங்கேற்றதன் மூலம் வினாத்தாளில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அனுபவம் கிடைத்தது. இவ்வாறு கூறினர்.

இத்தேர்வுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: டிச.,21ல் குரூப் 4 தேர்வு நடக்கிறது. அத்தேர்வு எழுத உள்ளவர்களின் நலன் கருதி தினமலர் சார்பில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மாணவர்களின் தேர்வு பயத்தை நீக்குவதாகும்.

அரசு தேர்வு போன்றே காலை 10 மணிக்கு துவங்கி பகல் ஒரு மணிக்கு முடிக்கப்பட்டது. ஒவ்வொரு மணிநேரத்திற்கும் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. தேர்வு எழுதியவர்களுக்கு கோடிங் ஷீட் வழங்கப்பட்டன. இதன் மூலம் கோடிங் ஷீட்டை நிரப்பும் அனுபவம் பலருக்கு கிடைத்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கும் இம்மாதிரி தேர்விற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இதில் பெறப்படும் வெற்றி, தோல்வி என்பது டிச.,21ல் எழுதவுள்ள தேர்வை பாதிக்காது. அந்த தேர்வை எவ்வாறு நன்றாக எழுதலாம் என்பதற்கு வழிகாட்டியாக முன்தயாரிப்பு பயிற்சிதான் இது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us