தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவகங்கை மாவட்டத்தில் 4 புதிய தொடக்க பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் 4 புதிய தொடக்க பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் 4 புதிய தொடக்க பள்ளிகள் துவங்க அரசு உத்தரவு


UPDATED : டிச 08, 2014 12:00 AM

ADDED : டிச 08, 2014 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2014 12:00 AM ADDED : டிச 08, 2014 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு ஊர்களில் புதிய தொடக்க பள்ளி துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒரு கி.மீ., தூரத்துக்குள் தொடக்க பள்ளி இருக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில் பள்ளிகள் இல்லாத ஊர்களில் புதிய தொடக்க பள்ளிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் இல்லாத 27 மாவட்டங்களில், 128 தொடக்க பள்ளிகள் துவங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு அதன் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட அச்சுந்தன் வயல் நொச்சிவயலிலும், மண்டபம் ஒன்றியம் வேதாளை சிங்கி வலை குப்பத்திலும், திருப்புல்லாணி ஒன்றியம் களரி கே.கொடிக்குளம், கமுதி ஒன்றியம் மண்டல மாணிக்கம் கழுவன் பொட்டலிலும் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை ஒன்றியம் கீழ உச்சானி கட்டனூரிலும், சாக்கோட்டை ஒன்றியம் கொத்தமங்கலம் ஏனாதிபட்டி, ஓ.சிறுவயல் சாலியிலும், கல்லல் ஒன்றியம் கே.அதங்குடி ஆரிபுரத்திலும் புதிய தொடக்க பள்ளிகள் துவங்கப்பட உள்ளது.

இப்பள்ளிகளுக்கு ஒரு இடைநிலை ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் நியமிக்கும் வரை மாற்று பணி மூலம் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதேபோல் 18 மாவட்டங்களில் 42 தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்ணவயல் பள்ளியும், விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி ஒன்றியத்துக்குட்பட்ட கே.வேலாயுதபுரம் பள்ளியும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் எந்த பள்ளியும் இடம் பெறவில்லை.

மாணவர் சேர்க்கை: புதிதாக துவங்கப்பட உள்ள தொடக்க பள்ளிகளுக்குரிய கட்டடம் கட்ட ரூ.10 லட்சத்து 39 ஆயிரம் செலவில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை அந்த ஊரை சேர்ந்தவர்கள் வேறு ஊரில் படிக்க சென்றால், அவர்களை இப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us