தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சமூகத்தை தலைநிமிர செய்யும் தினமலர்: என்.எல்.சி. நிர்வாகி புகழாரம்

மாணவர் சமூகத்தை தலைநிமிர செய்யும் தினமலர்: என்.எல்.சி. நிர்வாகி புகழாரம்

மாணவர் சமூகத்தை தலைநிமிர செய்யும் தினமலர்: என்.எல்.சி. நிர்வாகி புகழாரம்


UPDATED : டிச 08, 2014 12:00 AM

ADDED : டிச 08, 2014 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2014 12:00 AM ADDED : டிச 08, 2014 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: தினமலரின் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மாணவர் சமுதாயத்தை தலைநிமிர செய்கிறது என என்.எல்.சி.,நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் ராமலிங்கம் பேசினார்.

நெய்வேலி வட்டம் 10ல் உள்ள லிக்னைட் அரங்கில் "டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் தினமலர் கல்வி மலர் சார்பில் நடந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் என்.எல்.சி.,நகர நிர்வாக முதன்மை பொது மேலாளர் ராமலிங்கம் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும் மாணவர் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1965ம் ஆண்டில் இருந்து தினமலர் நாளிதழ் கல்வி சேவையாற்றி வருகிறது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வரும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி மாணவர் சமுதாயத்தில் நம்பிக்கை தீபத்தை ஒளிர செய்து வருகிறது.

கிரேக்க நாடு மீது படையெடுத்து வந்த எதிரி நாட்டின் பலத்தை கண்டு கிரேக்க வீரர்கள் அஞ்சி, சரணடைய முடிவெடுத்தனராம். அப்போது மன்னர் சற்றும் மனம் தளராமல், நமது குலதெய்வம் முன் நாணயத்தை சுண்டி விடுவோம். தலை விழுந்தால் போரிடுவோம். இல்லையென்றால் சரணடைவோம் என்றாராம். அதன்படி நாணயத்தை சுண்டியதும் தலை விழுந்தது. கடவுள் துணையிருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் கிரேக்க மன்னர் தலைமையில் போரிட்ட வீரர்கள் எதிரி நாட்டு படையை விரட்டியடித்து வெற்றி கண்டனர்.

அப்போது அமைச்சர் ஒருவர் மன்னரிடம் கடவுள் நமக்கு சரியாக வழி காட்டியுள்ளார் என்றாராம். உடனே மன்னர் அந்த நாணயத்தின் மறுபக்கத்தை அமைச்சரிடம் காட்டினாராம். அந்த பக்கமும் தலைதான் பொறிக்கப்பட்டிருந்தது. அப்போது மன்னர் அமைச்சரிடம், நமது வீரர்கள் தைரியசாலிகள், பலமிக்கவர்கள். ஆனால் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களுக்கு நம்பிக்கை உட்டவே கடவுளை துணைக்கு அழைத்தோம் என்றாராம்.

அதுபோல தினமலர் மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையை ஊட்டி அவர்களை ஜெயிக்க வைத்து வருகிறது. தினமலரின் கல்வி சேவை இளைய சமுதாயத்தை தலை நிமிர செய்கிறது. பிள்ளைகளுக்கு ஆஸ்தி சேர்த்து வைப்பதைவிட ஆசீர்வாதத்தை சேர்த்து வைக்க வேண்டும். பெரியவர்களின் ஆசீர்வாதம் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி நாட்டிற்கே வளத்தை கொடுக்கும். அந்த வகையில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின் ஆசீர்வாதம் அவர்களது பிள்ளைகளுக்கு மட்டுமின்றி நாட்டையே வளமாக்கிட வழிகாட்டி வருகிறது. தினமலரின் கல்வி சேவையை என்.எல்.சி.,நிறுவனம் மனதார பாராட்டி பெருமைப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us