கணித திறனறிவு போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கணித திறனறிவு போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
UPDATED : டிச 09, 2014 12:00 AM
ADDED : டிச 09, 2014 11:47 AM
அ நிறம் | அளவு
கோவை: கணித திறனறிவு போட்டியில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவை அவிநாசி ரோடு, கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் செல்லும் ரோட்டிலுள்ள மண்டல அறிவியல் மையத்தில், பள்ளி மாணவர்களுக்கான கணித திறனறிவு போட்டி நடந்தது. ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 510 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஒன்றரை மணி நேரம் நடந்த போட்டியில், சிறப்பாக தேர்வு ஏழுதியவர்களுக்கு, கோவை மண்டல அறிவியல் மைய வளாகத்தில், 2015 பிப்., நடக்கும் தேசிய அறிவியல் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
