தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைக்கிள் நிறுத்த நிழற்கூரை இல்லாமல் தவிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!

சைக்கிள் நிறுத்த நிழற்கூரை இல்லாமல் தவிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!

சைக்கிள் நிறுத்த நிழற்கூரை இல்லாமல் தவிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள்!


UPDATED : டிச 10, 2014 12:00 AM

ADDED : டிச 10, 2014 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2014 12:00 AM ADDED : டிச 10, 2014 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனைமலை: கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவியர் சைக்கிள் நிறுத்த நிழற்கூரை இல்லாததால், திறந்தவெளியில் வெயிலில் நிறுத்துவதால், மாலையில் பஞ்சர் ஆகி தள்ளிசெல்ல வேண்டிய அவல நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

கோட்டூர் மலையாண்டிப் பட்டணத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொங்காளியூர், சங்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, வேடசெந்தூர், பொன்னம்மன்துறை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரையில் 970 க்கும் அதிகமான மாணவியர் படித்து வருகின்றனர்.

இங்கு பயிலும் மாணவியருக்கு அரசு வழங்கிய மிதிவண்டிகளை பயன்படுத்தி 200க்கும் அதிகமானவர்கள் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து இந்த பள்ளிக்கு வருகின்றனர். பள்ளியில் மிதிவண்டிகளை நிறுத்த நிழற்கூரை இல்லாததால் திறந்தவெளியில், வெயிலில் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் சைக்கிள் டயர்களின் உள்ள காற்று வெப்பமடைந்து டியூப் வெடித்து பஞ்சராகியும், சில நேரங்களில் காற்று முழுவதும் வெளியேறியும் விடுகின்றது.

காலையில் வீட்டிலிருந்து சைக்கிளில் உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பும் மாணவியர், பள்ளி முடிந்து சைக்கிளை சிரமப்பட்டு தள்ளிக்கொண்டு செல்வது தினசரி நடக்கும் செயலாக மாறிவிட்டது. போதிய இட வசதியுள்ளதால் இங்கு சைக்கிள் நிறுத்த நிழற்கூரை அமைத்து தர வேண்டும் என மாணவியர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us