தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலை தடகளப் போட்டிகள் நிறைவு

பாரதியார் பல்கலை தடகளப் போட்டிகள் நிறைவு

பாரதியார் பல்கலை தடகளப் போட்டிகள் நிறைவு


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நேற்று நிறைவடைந்தது; இருவர் சிறந்த தடகள வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

பாரதியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற்று வந்தன; அப்போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடகளம் உள்ளிட்ட போட்டிகள், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடந்தன.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிறைவு நாளான நேற்று, வெற்றிபெற்ற வீரர்களுக்கு பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில், என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி முதலிடமும், பி.எஸ்.ஜி., கலைக் கல்லுாரி இரண்டாம் இடமும் பிடித்தன. பெண்கள் பிரிவில், நிர்மலா மகளிர் கல்லுாரி முதலிடமும், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணமாள் கல்லுாரி இரண்டாம் இடமும் பிடித்தன. மேலும், சிறந்த தடகள வீரர்களாக பி.எஸ்.ஜி., கலைக் கல்லுாரி மாணவர் முகமது ஜலாவுதீன் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணமாள் கல்லுாரி மாணவி சிவ அன்பரசி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் மும்முனை போட்டியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us