தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுகாதார சீர்கேட்டினால் அடிக்கடி காய்ச்சலில் விழும் பள்ளி மாணவர்கள்

சுகாதார சீர்கேட்டினால் அடிக்கடி காய்ச்சலில் விழும் பள்ளி மாணவர்கள்

சுகாதார சீர்கேட்டினால் அடிக்கடி காய்ச்சலில் விழும் பள்ளி மாணவர்கள்


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் புதர் மண்டி கொசுக்கள் உற்பத்தியாகி, காய்ச்சலால் தினமும் மாணவர்கள் பலர் ஆப்சென்ட் ஆகின்றனர். இருந்தும் கல்வி, சுகாதாரம், ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

ராஜபாளையம் ஒன்றியம் மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியை சேர்ந்த திருவள்ளுவர் நகரில்அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 160 மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள், ஊழியர்கள் என 14 பேர் உள்ளனர். இடப்பற்றாக்குறையால், தினமும் 3 வகுப்புகள் திறந்த வெளியில் நடக்கின்றன. பள்ளி வளாகம் பராமரிப்பு இன்றி புதராக உள்ளது.

புதர்அருகே வகுப்பறைகளும் உள்ளன. பள்ளி நேரத்திலே பாம்புகள் வந்து செல்கின்றன. பள்ளியின் நடுவில் மின்டிரான்ஸ்பார்மர் வேறு உள்ளது. மழைகாலத்தில் மாணவர்களுக்கு ஆபத்தான நிலை உள்ளது.

இந்த பள்ளியை சுற்றி குப்பையை கொட்டுவதால் பகலிலே கொசுக்கடி பிரச்னை உள்ளது. இதனால் ஏற்படும் காய்ச்சலால் தினமும் மாணவர்கள் பலர் ஆப்சென்ட் ஆகின்றனர். மாலை நேரத்தில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

பெற்றோர் தரப்பில் பிரேம் ஆனந்த், "எனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை பள்ளியில் கூறி விடுமுறை அனுமதிபெற வந்தேன். வந்தபின்தான் தெரிந்தது தினமும் 10 மாணவ, மாணவிகள் காய்ச்சல் பாதித்து விடுமுறை எடுக்கின்றனர் என்பது . பள்ளியை சுற்றி சுகாதாரமின்மை உள்ளது. கொசு, ஈ, விஷ பாம்புகள் நடமாட்டம் உள்ளன.

அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஏழை மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளிதானே என அலட்சியமாக உள்ளனர், என்றார். பள்ளியில் விசாரித்தபோது, "ஒன்றிய அதிகாரியிடம் பிரச்னை கூறி நேரில் வந்து பார்க்கும்படி கூறினோம். வரவில்லை. பள்ளியை சுற்றி குப்பை கொட்டுபவர்களை தடுத்தால், "வேறு இடத்தை தேர்வு செய்து கொடு, அங்கு குப்பை கொட்டுகிறோம்" என்கின்றனர். காய்ச்சல் பாதிப்பு உள்ளதால், மாணவர்கள் அதிகம் ஆப்சென்ட் ஆகின்றனர்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us