சோலார் மூலம் டிரை சைக்கிள் இயக்கும் முறை கண்டுபிடிப்பு
சோலார் மூலம் டிரை சைக்கிள் இயக்கும் முறை கண்டுபிடிப்பு
UPDATED : டிச 13, 2014 12:00 AM
ADDED : டிச 13, 2014 12:17 PM
காந்திகிராமம்: சோலார் மூலம் டிரை சைக்கிள் இயக்கும் முறையை காந்திகிராமம் பல்கலை கண்டுபிடித்துள்ளது.
தமிழகத்தில் 2 லட்சம் டிரைசைக்கிள்கள் உள்ளன. இதில் 75 ஆயிரம் சைக்கிள்கள் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகின்றன. இதில் 15 கி.மீ., செல்ல ஒரு லிட்டர் பெட்ரோல் தேவைப்படுவதால் ரூ.70 செலவாகிறது. பெட்ரோல் இன்ஜின் பொருத்த ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். அதிக செலவுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதை தவிர்க்க, காந்திகிராம பல்கலையின் எரிசக்தி மையம் சோலார் பவர் மூலம் டிரைசைக்கிள்களை இயக்கும் முறையை கண்டுபிடித்துள்ளது. இதில் 15 கி.மீ., இயக்க ரூ.30 செலவாகும். பேட்டரி, மோட்டார் பொருத்த ரூ.7 ஆயிரம் மட்டுமே செலவாகும்.
எரிசக்தி மைய தலைவர் கிருபாகரன் கூறியதாவது: சோலார் பவர் என்பதால் சுற்றுச்சூழல் மாசுபடாது. இதற்கு சாதாரண மோட்டார் மற்றும் 70 ஆம்பியர் பேட்டரி போதும். மோட்டாரை தொழிலாளர்களே தயாரித்து கொள்ள முடியும். இதற்கான பயிற்சியை தொழிலாளர்களுக்கு அளிக்க உள்ளோம். பேட்டரியை 6 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால் 15 கி.மீ., இயங்கும். ஆங்காங்கே சோலார் பேட்டரி ரீசார்ஜ் மையங்களை ஏற்படுத்தவும், வாய்ப்பு இல்லாத இடங்களில் மானிய விலையில் சோலார் பேனல்களை வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம், என்றார்.
