தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100வது நாளை நெருங்கும் மங்கள்யான் - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

100வது நாளை நெருங்கும் மங்கள்யான் - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

100வது நாளை நெருங்கும் மங்கள்யான் - விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!


UPDATED : டிச 13, 2014 12:00 AM

ADDED : டிச 13, 2014 12:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2014 12:00 AM ADDED : டிச 13, 2014 12:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் செய்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் ஜன., 1ல் நூறாவது நாளை கடக்க உள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் மதுரையில் நடந்த கருத்தரங்கிற்கு சங்க செயலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். விக்டோரியா எட்வர்டு மன்ற தலைவர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். மங்கள்யான் திட்ட துணை இயக்குனர் ஜெயசந்திரன் பேசியதாவது: மங்கள்யான் திட்டத்தின் வெற்றிக்கான அடிப்படை காரணமே கூட்டு முயற்சி தான். ஆய்வு நிலையிலே அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் ஆவணப்படுத்தப்பட்டு, அது குறித்தும் குழுவினர் ஒவ்வொருவரின் நீண்ட ஆய்வுக்கு பின் தயார் செய்யப்பட்டது.

செயற்கைக்கோள்கள் அனுப்பும்போது அதன் ஆயுள் ஆறு மாதமாக கருதப்படும். எரிபொருட்களின் பயன்பாட்டை பொறுத்து அவை சில ஆண்டுகள் தொடர்ந்து இயங்கும். செய்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் மங்கள்யான் செயற்கைக்கோள் ஜன., 1ம் தேதி தனது நூறாவது நாளை கடக்க உள்ளது, என்றார்.

திட்டத்தின் தலைவர் பால் பாண்டியன் பேசியதாவது: மங்கள்யானின் ஆராய்ச்சிகள் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எந்த திட்டமாக இருந்தாலும் உடனடியாக வெற்றி கிடைத்து விடுவதில்லை. விண்வெளி ஆய்வுகளில் பல தோல்விகளை சந்தித்துள்ளோம். அந்த தோல்வி ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து அதிகமாக ஆராய்ச்சிகள் செய்ததால் தான் மங்கள்யானை வெற்றிகரமாக செலுத்த முடிந்தது.

இஸ்ரோவில் இதுபோன்ற திட்டங்கள் தோல்வியில் முடிந்தால், அந்த குழுவினர் மீது நடவடிக்கைகள் எடுப்பதில்லை. மாறாக மீண்டும் தோல்வி ஏற்படக்கூடாது என்பதற்காக காரணங்கள் அதிகமாக ஆராயப்பட்டு, அடுத்த வெற்றியை எட்டுவதற்கு அந்த தோல்வியும் ஒரு பாடமாக வைக்கப்படும், என்றார்.

விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பேசுகையில், "விண்வெளியில் ஆறுபேர் பயணம் செய்யக்கூடிய டெல்டா 400 வெரைன் விண்கலத்தை அமெரிக்கா அனுப்பி சோதனை ஓட்டமிட்டுள்ளது. அதே போன்று இந்தியாவும் அனுப்ப திட்டமிட்டு அதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us