தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலமைச்சரின் தகுதி பரிசுத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

முதலமைச்சரின் தகுதி பரிசுத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

முதலமைச்சரின் தகுதி பரிசுத்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : டிச 14, 2014 12:00 AM

ADDED : டிச 14, 2014 01:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2014 12:00 AM ADDED : டிச 14, 2014 01:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: முதலமைச்சரின் தகுதி பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பரிசு பெற தகுதியுடைய, 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதலமைச்சரின் தகுதி பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், ஆண்டுதோறும், 3000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

2013 -14ம், கல்வியாண்டில், 12ம் வகுப்பு அரசுப் பொதுதேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் (நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண், மாணவர்களுக்கு -1087, மணவிகளுக்கு - 1101) இந்த பரிசு தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள மாணவ, மாணவியர் படிக்கும் கல்லூரி வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us