4 பள்ளிகளுக்கு சமையல் அறை கட்டுவதற்கு 10.95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
4 பள்ளிகளுக்கு சமையல் அறை கட்டுவதற்கு 10.95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
UPDATED : டிச 15, 2014 12:00 AM
ADDED : டிச 15, 2014 10:49 AM
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில், நான்கு பள்ளிகளுக்கு சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு, 10.95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியத்தில், 109 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் போதிய சமையல் அறை கட்டடம் வசதி இன்றி காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒன்றிய நிர்வாகத்தின் பரிந்துரையில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், புளிம்பாக்கம், வேளியூர், பழையசீவரம், 144 தண்டலம் ஆகிய பள்ளிகளுக்கு, இருப்பு அறையுடன் கூடிய, நான்கு சமையல் அறை கட்டடம் கட்டுவதற்கு 10.95 லட்சம் ரூபாய் நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதி, கடந்த 2012-13ம் ஆண்டு ஒப்புதல் வழங்கிய நிதியில், நடப்பாண்டு நான்கு பள்ளிகளை தேர்வு செய்து, பணிகள் நடைபெற உள்ளது என, வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
