பெண்கள் பள்ளிக்கு சுற்றுசுவர், நுழைவாயில் கேட் இல்லை
பெண்கள் பள்ளிக்கு சுற்றுசுவர், நுழைவாயில் கேட் இல்லை
UPDATED : டிச 16, 2014 12:00 AM
ADDED : டிச 16, 2014 12:14 PM
திண்டிவனம்: சுற்றுசுவர், நுழைவு வாயில் கேட் இல்லாததால் இளைஞர்களின் விளையாட்டு மைதானமாக பள்ளி வளாகம் மாறியுள்ளது.
திண்டிவனம் நகராட்சி முருங்கம்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் சுற்றுசுவர் மற்றும் நுழைவு வாயில் கேட் இல்லை. இதனால், பள்ளி விடுமுறை தினங்களில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாட்டு, மது அருந்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கிரிக்கெட் விளையாடும் போது, வகுப்பறை ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்துகின்றனர். முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுசுவர், நுழைவு வாயில் கேட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
