தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட ரூ.37.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட ரூ.37.10 லட்சம் நிதி ஒதுக்கீடு

பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட ரூ.37.10 லட்சம் நிதி ஒதுக்கீடு


UPDATED : டிச 17, 2014 12:00 AM

ADDED : டிச 17, 2014 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2014 12:00 AM ADDED : டிச 17, 2014 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 37.10 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிப்பறைகள் கட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இப்பணிகளை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 337 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் போதிய கழிப்பறைகள் இல்லை. இந்த குறையை போக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார். அதை ஏற்று, கழிப்பறைகள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பாரத சுகாதார இயக்க திட்டத்தின் கீழ், வட்டாரங்கள் தோறும், ஆறு முதல் 12 பள்ளிகளில் கழிப்பறை கட்டுவதற்கு, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 103 அரசு பள்ளிகளில், 106 கழிப்பறைகள் கட்டுவதற்கு, தலா 35 ஆயிரம் ரூபாய் என 37.10 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்து உள்ளது.

இப்பணிகளை, இம்மாத இறுதியில் துவக்கி, மூன்று மாதங்களுக்குள் கட்டி முடிக்க, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை அறிவுறுத்தி உள்ளது.

நிபந்தனைகள்

* ஒன்றிய பொறியாளர்களின் தொழில்நுட்ப அனுமதி பெற வேண்டும்.
* பள்ளி கழிப்பறைகளை தரத்துடன் கட்டித்தர வேண்டும்.
* பள்ளி கழிப்பறைகள், யுனிசெப் நிறுவனத்தின் மாதிரி தரத்துடன் இருக்க வேண்டும்.
* பணி அறிக்கை மற்றும் புகைப்படத்தை, ஊரக வளர்ச்சி துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
* குறிப்பாக, கழிப்பறைகளுக்கு போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
* கட்டி முடித்த பிறகு, கிராமக் கல்விக்குழு மற்றும் குடிநீர் சுகாதார குழுவினர் கண்காணிக்க வேண்டும்.

ஒன்றியம்  -  கழிப்பறைகள்

காஞ்சிபுரம் - 7
வாலாஜாபாத்  - 12
உத்திரமேரூர்  - 9
ஸ்ரீபெரும்புதுார் - 10
குன்றத்துார்  - 6
அச்சிறுபாக்கம் - 10
சித்தாமூர்  - 8
லத்துார் - 6
மதுராந்தகம் - 7
காட்டாங்கொளத்துார் -  8
திருக்கழுக்குன்றம்  - 8
திருப்போரூர்  - 9
புனிததோமையார்மலை  - 6

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us