தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு தருமா காவல்துறை?

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு தருமா காவல்துறை?

பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு தருமா காவல்துறை?


UPDATED : டிச 17, 2014 12:00 AM

ADDED : டிச 17, 2014 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2014 12:00 AM ADDED : டிச 17, 2014 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம் இளைஞர்கள் செய்யும் சேட்டைகளால், பெண் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

தேவதானப்பட்டி பகுதியில் ஜெயமங்கலம், சில்வார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, அ.வாடிப்பட்டி கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், வைகை அணை கிராமங்களில் மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் இளைஞர்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் சிலர் சில்மிஷம் செய்து தகராறு செய்தனர். இதேபோன்று மாணவியை தன்னை காதலிக்க வேண்டும் என்று ஒருவர் கட்டாயப்படுத்தியுள்ளார். ரசாயனம் கலந்த மையை முகத்தில் வீசினர். இதில் 2 மாணவிகளுக்கு முகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு 10 ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டார்.

பெற்றோர் புகார் கொடுக்க தயங்குகின்றனர். இதனால் தொல்லை தருவோர் எல்லை மீறுகின்றனர். நேற்று முன்தினம் காலை ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற மாணவி மீது மாணவர்கள் சிலர் பாம்பை வீசி பயமுறுத்தினர். இதனால் பெண்கல்வி கேள்விக்குறியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு தொல்லை தருவோரை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளி நேரங்களில் பெண் போலீசாரை மப்டியில் அனுப்பி மாணவிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட குழுவினர் மாணவிகளை கிண்டல் செய்யும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோர் சிலர் கூறியதாவது: வறுமையின் காரணமாக உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைத்துள்ளோம். ஆனால் மாணவிகளின் பின்னால் செல்வது, மொபைல் எண்ணைக் கொடு என்று கட்டாயப்படுத்துதல், கேலி செய்வது உச்சகட்டமாக கையைப்பிடித்து இழுத்தல் போன்ற எல்லை மீறிய செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.

புகார் செய்யவில்லை என்பதற்காக போலீசார் வேடிக்கை பார்க்காமல் பெரிய அளவில் பிரச்னை ஏற்படுவதற்கு முன் சில்வார்பட்டி உட்பட பல கிராமங்களில் மாணவிகள் மீது நடந்து வரும் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us