தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாகிஸ்தானில் பலியான குழந்தைகளுக்காக பள்ளிகளில் 2 நிமிட மவுன அஞ்சலி

பாகிஸ்தானில் பலியான குழந்தைகளுக்காக பள்ளிகளில் 2 நிமிட மவுன அஞ்சலி

பாகிஸ்தானில் பலியான குழந்தைகளுக்காக பள்ளிகளில் 2 நிமிட மவுன அஞ்சலி


UPDATED : டிச 17, 2014 12:00 AM

ADDED : டிச 17, 2014 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2014 12:00 AM ADDED : டிச 17, 2014 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தும் பள்ளியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள், அங்கு நடத்திய கோர தாண்டவத்தில் 132க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்; மேலும் ஒன்பது ஆசிரியர் அலுவலர்கள் உட்பட 145 பேர் கொல்லப்பட்டனர்.

125க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலை நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் ஆறு பேரை பாகிஸ்தான் அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர்.

உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த தாக்குதல் அங்குள்ள ஆர்மி பப்ளிக் பள்ளியில் நேற்று காலை 11:00 மணியளவில் நடந்தது. பலியான குழந்தைகளில் 5 , 12 வயதுடையவர்கள் தான் அதிகம் என பெஷாவர் நகரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பள்ளி குழந்தைகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மரணமடைந்த பாக்., குழந்தைகளுக்காக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us