இளம் பெண்களுக்கு இலவச உள்ளாடைகள் வழங்க நிதி ஒதுக்கீடு
இளம் பெண்களுக்கு இலவச உள்ளாடைகள் வழங்க நிதி ஒதுக்கீடு
UPDATED : டிச 18, 2014 12:00 AM
ADDED : டிச 18, 2014 11:38 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 2,459 வளர்இளம் பெண்களுக்கு, இலவச உள்ளாடைகள் வழங்க 3.24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூகநலத்துறை மூலம் 26 மாவட்டங்களில், அரசு குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 2,459 வளர்இளம் பெண்கள் தங்கி, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கின்றனர். இவர்களுக்கு, இலவச உள்ளாடைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொருவருக்கும், 10 ’நாப்கின்’கள் வீதம், 24,590 ’நாப்கின்’கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, 8.85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், 149 வளர்இளம் பெண்களுக்கு உள்ளாடைகள், நாப்கின்கள் வழங்க 73 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
